"பழித்தாரும் வாழ்க.. பகைத்தாரும் வாழ்க.." கவிஞர் வைரமுத்து வெளியிட்ட பதிவு.! இணையத்தில் வைரல்!!



vairamuthu-post-a-poem-in-x-page

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக வலம் வரும் கவிஞர் வைரமுத்து அண்மையில் பட விழாவில் கலந்து கொண்ட போது, பாடல் வரிகள் பெரிதா, இசை பெரிதா என்பது குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் இசைதான் பெரிது. ஒரு பாடலின் முதன்மையான அம்சமே அதுதான் என இசையமைப்பாளர் இளையராஜா கூறியிருந்தார். 

இசை பெரிதா? பாடல் வரி பெரிதா? 

அதற்கு வைரமுத்து, எப்படி ஒரு மனிதனுக்கு பெயர் அடையாளமாக இருக்கிறதோ அவ்வாறுதான் பாடலுக்கு வரிகள் முக்கியம். சில நேரங்களில் இசையை விட மொழி பெரியதாக இருக்கும், சில சமயங்களில் இசை பெரியதாக இருக்கும். இசையும் வரியும் சேர்ந்தால்தான் பாடல். இதை புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என மறைமுகமாக சாடியிருந்தார்.

இதையும் படிங்க: இளையராஜாவின் காபிரைட்ஸ் பிரச்சனை குறித்து வெற்றிமாறன்.! விஜயின் அரசியல் பற்றி கருத்து.!

காலம் கடந்து செல்வேன் 

இந்நிலையில் கங்கை அமரன், இளையராஜாவை பற்றி ஏதாவது பேசினால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என வைரமுத்துவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து இன்று வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், 

பழித்தாரும் வாழ்க; என்னைப்
பகைத்தாரும் வாழ்க; மன்றில்
இழித்தாரும் வாழ்க; வாழ்வில்
இல்லாத பொய்மை கூட்டிச்
சுழித்தாரும் வாழ்க; என்னைச்
சுற்றிய வெற்றி வாய்ப்பைக்
கழித்தாரும் வாழ்க; நானோ
காலம்போல் கடந்து செல்வேன் எனக் கூறியுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கூலி பட இசை காப்புரிமை விவகாரம்; ரஜினிகாந்தின் நிலைப்பாடு என்ன?.. நச் பதில்.!