இளையராஜாவின் காபிரைட்ஸ் பிரச்சனை குறித்து வெற்றிமாறன்.! விஜயின் அரசியல் பற்றி கருத்து.!



vetrimaran-statement-about-elayaraja-copyrights-case-is

சமீபகாலமாகவே சர்ச்சையாகி கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் இசை காப்புரிமை விவகாரம் குறித்து பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். 

இளையராஜா இசை காப்புரிமை வழக்கு :
இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த இசைக்கான காப்புரிமை குறித்த வழக்கை தொடர்ந்தார். இது பற்றி பலரும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். சமீபத்தில், இளையராஜாவின் பாடல்களுக்கு அவர் உரிமை கொண்டாடினார் என்றால், அந்த பாடலில் உள்ள வரிகளுக்கு பாடல் ஆசிரியர் உரிமை கொண்டாடலாமா என்று இந்த விஷயம் பேசு பொருளாக மாறியது. 

Ilayaraja

வைரமுத்து சர்ச்சை :
இதனால் வைரமுத்துவும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், நேற்று அமீரின் 'உயிர் தமிழுக்கு' திரைப்படம் நெல்லையில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. இதை பார்க்க இயக்குனர் வெற்றிமாறன் வந்திருந்தார். படம் பார்த்து முடித்த பின்னர் வெற்றிமாறன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் இந்த இளையராஜாவின் இசை காப்புரிமை சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இதையும் படிங்க: கூலி பட இசை காப்புரிமை விவகாரம்; ரஜினிகாந்தின் நிலைப்பாடு என்ன?.. நச் பதில்.!

வெற்றிமாறன் கருத்து :
அதற்கு வெற்றிமாறன், "பணம் ஈட்டும் நோக்கத்தில் தான் ஒரு படத்தில் வேலை செய்யவே போகிறோம். எனவே, அதை உருவாக்கும் நபருக்கான உத்திரவாதமும், உரிமையும் தேவை என்பது தான் எனது கருத்து. நடிகர் விஜயின் அரசியல் செயல்பாடு பற்றி பதில் அளிக்க வேண்டுமானால், அவர் களத்தில் இறங்கி செயல்பட்டால் தான் சொல்ல முடியும். 

Ilayaraja

சாதிய பாகுபாடுகள் :
'சமீப காலமாக சாதிய பாகுபாடுகள் தமிழ்நாட்டில் இல்லை' என்று பலரும் கூறுகின்றனர். அவர்கள் எல்லாம் இந்தியாவில் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகம் இருக்கின்றது. அது மறுக்க முடியாத உண்மை." என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இசை காப்புரிமை விவகாரம்; வைரமுத்து அதிரடி ட்விட்.!