புதிய படத்தில் ஹீரோவாகும் நடிகர் வடிவேலு! படத்தின் பெயர் என்ன தெரியுமா?

புதிய படத்தில் ஹீரோவாகும் நடிகர் வடிவேலு! படத்தின் பெயர் என்ன தெரியுமா?


vadivelu-casting-in-pei-mama-new-movie

தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத இடத்தில் இருந்தவர் நடிகர் வடிவேலு. எனக்கு எண்டு கார்ட்டே கிடையாதுடா என்ற அளவிற்கு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார் வைகைப்புயல் வடிவேலு. சாதாரண ஒரு துணை கலைஞனாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக திகழ்ந்தார்.

அரசியல் பிரச்சாரம், அரசியல் ஈடுபாடு என ஒருசில காரணங்களால் கடந்த சில வருடம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார் வடிவேலு. அதன்பின்னர் எலி, விஷாலுடன் கத்தி சண்டை போன்ற படங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்தார். தற்போது இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடித்துவந்த நிலையில் ஒருசில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Vadivelu

இந்நிலையில் வடிவேலு ஒரு பேய் கதையில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேய் மாமா என்ற பெயரில் வடிவேலு நடிப்பில் சக்தி சிதம்பரம் இந்த படத்தை இயக்கவுள்ளதாக அந்த போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது. இது உண்மையான தகவலா அல்லது பொய்யா என்பது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தொடர்ந்து பேய் படங்கள் ஹிட்டாகிவருவதால் வடிவேலுக்கு இப்படி ஒரு ஆசை வந்துவிட்டதுபோல என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.