படிப்பு பிரசாதம் மாதிரி.. இணையத்தை தெறிக்கவிடும் வாத்தி டீசர்! கொண்டாடும் ரசிகர்கள்!!Vaathi teaser released

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷ் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு சார் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வாத்தி படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஹீரோயினாக, தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.  இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. மேலும் படத்தின் மீது ரசிகர்களுக்கான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.