ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா தனுஷின் வாத்தி... செம மாஸாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா தனுஷின் வாத்தி... செம மாஸாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...


vaathi-first-look-poster-today-released

இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் வாத்தி. தெலுங்கில் இந்தப் படத்துக்கு சார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். 

இதற்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி மற்றும் மாரி படங்கள் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செம மாஸாக வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் டீஸர் நாளை வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.