BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பிக் பாஸ் நாயகனின் புது படம்: வெளியானது இரண்டாவது பாடல்..!
வா வரலாம் வா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, காதல் மதி வரியில் உருவான சொல்லப்போறேன் பாடல் வரவேற்பை பெற்று வருகிறது.
எஸ்.பி.ஆரின் எஸ்.ஜி.எஸ் கிரியேடிவ் மீடியா தயாரிப்பில், தேனிசைத்தென்றல் தேவா இசையில், இயக்குனர் எல்.ஜி ரவிச்சந்தர் - எஸ்.பி.ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வா வரலாம் வா.
இப்படம் வரும் டிசம்பர் மாதம் 01ம் தேதியன்று உலகளவில் வெளியாகிறது. படத்தை தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் மற்றும் எல்.ஜி. ரவிச்சந்தர் இணைந்து இயக்கி இருக்கின்றனர்.
பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். மஹானா சஞ்சீவி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, தீபா, காயத்ரி ரெமா, சிங்கம்புலி, வையாபுரி, பயில்வான் ரங்கநாதன், மீசை இராஜேந்திரன் உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர்.

குழந்தை கடத்தல் தொடர்பான கதையை மையகருத்தாக கொண்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, படத்தின் டிரைலர் மற்றும் ஜிலுஜிலுன்னு என்ற பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மீக இளையசித்தர் கோ.ப செந்தில்குமாரால், படத்தின் இரண்டாவது பாடல் "சொல்லப்போறேன்" வெளியிடப்பட்டுள்ளது.
காதல் மதியின் வரிகளில், ஜித்தன் ராஜின் பின்னணி குரலில் வெளியாகியுள்ள சொல்லப்போறேன் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.