உச்சிமலை காத்தவராயன்.! இணையத்தை கலக்கும் மாகாபா - ஆர்.ஜே விஜய்யின் ஆல்பம் பாடல்.! நீங்க பார்த்துட்டீங்களா!!

உச்சிமலை காத்தவராயன்.! இணையத்தை கலக்கும் மாகாபா - ஆர்.ஜே விஜய்யின் ஆல்பம் பாடல்.! நீங்க பார்த்துட்டீங்களா!!


uchimalai-kathavaraayan-album-song-viral

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து மக்களுக்கு பிடித்த பிரபலமாக இருப்பவர் மாகாபா ஆனந்த் . அவரைப் போலவே பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர் ஆர்.ஜே விஜய். இருவரும் பல திரைப்படங்களில் முக்கிய  கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். மாகாபா மற்றும் ஆர்.ஜே விஜய் இருவரும் இணைந்து தற்போது புதிய ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர்.

மேலும் உச்சிமலை காத்தவராயன் என துவங்கும் இந்த பாடலில் அவர்களுடன் நடிகை ஆஷ்னா சவேரியும் ஆட்டம் போட்டுள்ளார். இந்த ஆல்பம் பாடலை ஆனவி இசையமைத்துள்ளார். மேலும் அவரே ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து  பாடியும் உள்ளார். இதற்கு
மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

இந்த பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார். உச்சிமலை காத்தவராயன் பாடலை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.