சீரியல் நடிகைக்கு மார்பக புற்றுநோய்.. இன்ஸ்டாவில் கண்ணீர் தகவல்.. ரசிகர்கள் ஆறுதல்.!

சீரியல் நடிகைக்கு மார்பக புற்றுநோய்.. இன்ஸ்டாவில் கண்ணீர் தகவல்.. ரசிகர்கள் ஆறுதல்.!


tv-actress-chhavi-mittal-affected-breast-cancer-says-he

பிரபல சீரியல் நடிகை சாவி மிட்டல் தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பஹுரானியா 3, கர் கி லக்ஷ்மி பெட்டியான், பந்தினி, நாகின், விராசத் உட்பட பல ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை சாவி மிட்டல். இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், "என் அன்பான மார்பகம்., இது உங்களுக்கான பதிவு. உங்களின் மகத்துவத்தை நான் முதலில் கவனித்து, எனக்கு மகிழ்ச்சியை அளித்தபோதுதான். 

actress

எனது 2 குழந்தைகளுக்கும் உணவளிக்கும் போது உங்களின் முக்கியவத்துவதை உணர்ந்தேன். இன்று நான் உங்களுக்காக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நான் உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை எதிர்கொண்டு போராடி வருகிறேன். உங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை நல்ல விஷயம் கிடையாது என்றாலும், என் மனதை அவை ஒருபோதும் சீர்குலைக்காது. 

actress

இது எளிதாக இருக்கப்போவதில்லை என்று தெரிந்தாலும், அதில் இருந்து விடுபட முயற்சிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக நடிகை மிட்டல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.