அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பனிப்பொழிவில் பளிங்கு பூவாய் திரிஷா! லியோ படப்பிடிப்பு தளத்திலிருந்து வந்த அப்டேட்!
தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக டாப் 10 நடிகைகளில் ஒருவராக இருப்பவர் திரிஷா. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் ராங்கி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜயுடன் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் படம் இதுவாகும். விஜய் மற்றும் திரிஷா காம்பினேஷனில் இதற்கு முன் வந்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்ததால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. லியோ படத்திற்கான அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது.
சில தினங்களுக்கு முன்பு படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பையும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது படக் குழு. இந்நிலையில் இத்திரைப்படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில், காதலர் தினத்தை முன்னிட்டு லியோ படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகை திரிஷா காதலர் தின ஸ்பெஷலாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களை பதிவேற்றி இருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பனிப்பொழிவிற்கு நடுவே ரோஜா பூவைப் போல் மலர்ந்திருக்கும் திரிஷாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதே போன்ற தோற்றத்துடன் தான் திரிஷா இப்படத்தில் வருவாரா? எனவும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.