லியோ படம் பற்றி திரிஷா சொன்ன செம்ம அப்டேட்..? ரசிகர்கள் கொண்டாட்டம்.!

லியோ படம் பற்றி திரிஷா சொன்ன செம்ம அப்டேட்..? ரசிகர்கள் கொண்டாட்டம்.!


Trisha told Leo update news

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படம் "லியோ". ஒரு கேங்ஸ்டர் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளும், சண்டைகளும் தான் லியோ படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. 

Leo

மேலும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் 30ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 19ம் தேதி 'லியோ" ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட திரிஷாவிடம், லியோ படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு திரிஷா "இயக்குனரும் இங்கு இருக்கிறாரே. அவரிடம் கேளுங்கள்" என்று கூறியுள்ளார்.

Leo

தொடர்ந்து த்ரிஷாவிடம் கேள்வி கேட்கப்பட்டதால், " லியோ படத்தின் ப்ரமோஷன் பயங்கரமாக இருக்கும். அதுவரை காத்திருங்கள்" என்று கூறியுள்ளார். இதனால் அனைவருக்கும் குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு  படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.