புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
10 ஆண்டுகளுக்குப் பின் செல்வராகவனுக்கு ஓகே சொன்ன திரிஷா... ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஸ்வீட்டான ட்விட்.!
தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி என அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.
கடந்த வருடம் இவரது இயக்கத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் செல்வராகவன் 2013 ஆம் ஆண்டு பதிவு செய்த ட்வீட் ஒன்றிற்கு 10 வருடங்கள் கழித்து திரிஷா ரிப்ளை செய்திருப்பது தற்போது வைரலாகி இருக்கிறது.
2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே. இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் வெங்கடேஷ் மற்றும் திரிஷா நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் தனுஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படமானது.
I’m ready @selvaraghavan 😝 https://t.co/9DCojSHe3u
— Trish (@trishtrashers) September 10, 2023
ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே திரைப்படம் தொடர்பாக பதிவு செய்திருந்த செல்வராகவன். இந்தத் திரைப்படத்தை தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன் . வெங்கடேஷ் மற்றும் திரிஷாவுடன் வேலை செய்தது மறக்க முடியாதது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்ன சொல்கிறாய் என த்ரிஷாவிடம் கேட்டிருக்கிறார். இதற்கு தற்போது பதில் அளித்திருக்கும் திரிஷா நான் ரெடி என செல்வராகவனை டேக் செய்துள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.