பிறந்த நாள் கொண்டாடும் பொன்னியின் செல்வன் குந்தவி.. வைரலாகும் புகைப்படம்.!

பிறந்த நாள் கொண்டாடும் பொன்னியின் செல்வன் குந்தவி.. வைரலாகும் புகைப்படம்.!



Trisha Birthday celebration photos viral

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா கிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மாடல் அழகியான த்ரிஷா சென்னையில் 1999 ஆம் வருடம் அழகுபட்டத்தை வென்றிருக்கிறார்.

trisha

மேலும், முதன் முதலில் 1999 ஆம் வருடம் ஜோடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பு திறமை பாராட்டப்பட்டு படவாய்ப்புகள் குவிந்தன. இதன் பின் மௌனம் பேசியதே, சாமி, அலை, கில்லி, ஆயுத எழுத்து, ஆறு, பீமா, அபியும் நானும், கொடி, 96, பேட்ட போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

trisha

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. இவரின் அழகாலும், நடிப்பு திறமையாலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார்.

trisha

சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா கிருஷ்ணன் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அவ்வாறு பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரலாக பரவும். இதன்படி இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரிஷா தனது பிறந்தநாள் புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.