என்னது!! பிரபல மலையாள தயாரிப்பாளரை திருமணம் செய்ய உள்ளாரா நடிகை திரிஷா... வைரலாகும் பதிவு!!

என்னது!! பிரபல மலையாள தயாரிப்பாளரை திருமணம் செய்ய உள்ளாரா நடிகை திரிஷா... வைரலாகும் பதிவு!!


Trisha answer about her marriage

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 20 ஆண்டுக்களுக்கு மேலாக டாப் ஹீரோயினாவும் வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் விஜய், அஜித், விஷால், விக்ரம், கமல் போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக தல அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி மலையாளத்தில் மோகன்லால், டொவினோ தாமஸ் உள்ளிட்ட டாப் நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

trisha

இந்நிலையில் தற்போது திரிஷா பிரபல மலையாள தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “DEAR YOU KNOW WHO YOU ARE AND YOUR TEAM KEEP CALM AND STOP RUMOURING CHEERS!" என பதிவிட்டுள்ளார். இந்த வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.