சினிமா

நீங்கள் இதுவரை பார்த்திராத தமிழ் நகைச்சுவை நடிகர்களின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைபட தொகுப்பு!

Summary:

Top tamil comedy actors family photos

நாம் அனைவரும் நடிகர் மற்றும் நடிகைகளின் குடும்ப புகைப்படங்களை அதிகம் பார்த்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் காமெடி நடிகர்களின் குடும்ப புகைப்படங்களை பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அந்த வகையில் தமிழ் சினிமாவின் டாப் காமெடி நடிகர்களின் குடும்ப புகைப்படங்களைத்தான் நாம் இங்கே காண உள்ளோம்.

நடிகர் சந்தானம்:
காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக மாறி தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் லொள்ளுசபா என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி நடிகர் சிம்பு மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் சந்தானம். இதோ அவரது குடும்ப புகைப்படம்.

நடிகர் சூரி:
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வந்த பரோட்டா சாப்பிடும் காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் பரோட்டா சூரி. தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு இல்லாத நிலையில் அவர் இடத்தை சூரி அவர்கள் பிடித்துள்ளார். இதோ அவரது குடும்ப புகைப்படம்.

நடிகர் விவேக்:
சின்ன கலைவாணர் என அனைவரலாலும் அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். அதற்கு முக்கிய காரணம் அவரது நகைச்சுவையில் நாட்டுக்கு தேவையான பல நல்ல கருத்துக்களையும் சேர்த்து கூறுவதாலையே அவரை அனைவரும் சின்ன கலைவாணர் என அழைக்கின்றனர். இதோ விவேக் அவர்களின் குடும்ப புகைப்படம்.

நடிகர் வடிவேலு:
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. ஒரு சில காரணங்களால் அவர் இன்று சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் இன்றளவும் அவரது நகைச்சுவை அனைவராலும் பேசப்படுகிறது.

ரோபோ சங்கர்:
விஜய் தொலைக்காட்சியில் நடந்த கழக போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். தற்போது பல்வேறு திரைப்படங்களில் நல்ல கதைகளில் நடித்து வருகிறார்.


Advertisement