இன்று, பிறந்தநாள் காணும் நடிகர் மாதவன்; குவியும் வாழ்த்துகள்.!today birthday boy - actor madhavan - fans congrass

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். முதல் படமே மாபெரும் வெற்றிப்படம் என்பதால் இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உருவானார்கள். அதை தொடர்ந்து மின்னலே திரைப்படம் மூலம் அனைத்து பெண்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் மாதவன்.

சாக்லேட் பாயாக இருந்த மாதவன் இறுதிச்சுற்று படத்தில் தனது தோற்றத்தை மாற்றி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது, இஸ்ரோ விஞ்ஞானி விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகி வரும் ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் மாதவன். 

இந்த படத்திற்காக அச்சு அசலாக நம்பி நாராயணன் போலவே தனது தோற்றத்தை மாற்றினார் நடிகர் மாதவன். இந்நிலையில், இன்று பிறந்தநாள் விழாவை கொண்டாடும் நடிகர் மாதவனுக்கு அவரது ரசிகர்கள் டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.