என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி!! பிரபல பாடகர் நடராஜன் மரணம்!! பிரபலங்கள் இரங்கல்

என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி!! பிரபல பாடகர் நடராஜன் மரணம்!! பிரபலங்கள் இரங்கல்


TKS Natarajan passed away

தமிழகத் திரைப்பட நடிகர் மற்றும் தெம்மாங்கு பாடகர் டி. கே. எஸ். நடராஜன் அவர்கள் இன்று காலை உயிரிழந்தார்.

தமிழ் நாடகத்துறையில் புகழ்வாய்ந்த டிகேஎஸ் கலைக்குழுவில், இவர் சிறுவனாக இருந்தபோது சேர்ந்து நடித்ததால் நடராஜன் என்ற இவரது பெயருக்கு முன்னாள் டிகேஎஸ் என்ற அடைமொழியோடு டிகேஎஸ். நடராஜன் என அழைக்கப்படுகிறார்.

வாங்க மாப்பிள்ளை வாங்க படத்தில் தெம்மாங்கு பாடலாக சங்கர் கணேஷ் இசையில் டிகேஎஸ் நடராஜன் பாடிய 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' என்ற பாடல் தான் அவரைத் தமிழகம் முழுவதும் அடையாளப்படுத்தியது.

கொட்டாம்பட்டி ரோட்டிலே " என்ற அடுத்த பாடலும் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து டிகேஎஸ் நடராஜன் தெம்மாங்கு கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். அவர் பாடிய என்னடி முனியம்மா பாடல் நடிகர் அர்ஜுன் நடித்த 'வாத்தியார்' படத்தில் ரீமிக்ஸ் செய்திருந்தார்கள். அந்த பாடலிலும் டிகேஎஸ் நடராஜன் நடித்திருந்தார்.

தற்போது 87 வயதாகும் நடராஜன் உடலனல குறைவால் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.