அமரன் திரைப்படம் ஓடிய திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்; முக்கியப்புள்ளி கைது.!



Tirunelveli Alankar Cinemas Man Arrested after Petrol Bomb Issue 

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம், அலங்கார திரையரங்கில் அமரன் படம் கடந்த நவம்பர் மாதம் திரையிடப்பட்டது. கடந்த 16 நவம்பர் 2024 அன்று, அதிகாலை நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனினும், குண்டுவீச்சு தொடர்பான சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், உள்ளூரில் வசித்து வந்த 2 பேரை கைது செய்தனர். 

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக விவகாரம்; மனம்திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்.! பேசியது என்ன?

முக்கிய குற்றவாளி கைது

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் காரணமாக, முதற்கட்ட கைது நடவடைகைக்கு பின்னர், தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர். மேலும், தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள், மேலப்பாளையத்தில் ஆய்வு செய்தனர். 

அப்போது, சித்தாந்த ரீதியிலான விஷயத்தில், உள்நோக்கத்துடன் அமரன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது உறுதியானது. இந்த விசயத்திற்கு மூளையாக செயல்பட்ட ஆல் அமீன் நகரில் வசித்து வந்த இம்தியாஸ் (வயது 42) தலைமறைவாகவே, தீவிரவாத அமைப்பை சேர்ந்த அவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: அட.. வேற லெவல்தான்.! சிவகார்த்திகேயனின் 25வது பட டைட்டில் இதுவா.! வெளிவந்த தகவல்!!