லியோ படத்தின் சிறப்புக்காட்சி டிக்கட் கட்டணம் இவ்வளவு ரூபாயா.! ரசிகரின் பதிவால் அதிர்ச்சி.?

லியோ படத்தின் சிறப்புக்காட்சி டிக்கட் கட்டணம் இவ்வளவு ரூபாயா.! ரசிகரின் பதிவால் அதிர்ச்சி.?


 Ticket price for leo special show fans audio leaked

லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவெர்சில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் "லியோ". மேலும் இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின் ஆகியோர் நடித்துள்ளனர்.

vijay

வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று முன் தினம் லியோ திரைப்படத்தின் ட்ரைலர் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியானது. அப்போது விஜய் ரசிகர்கள் அத்துமீறி நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்தது.

ட்ரைலர் வெளியான சென்னை ரோகிணி தியேட்டரை ரசிகர்கள் சேதப்படுத்திய வீடியோ வெளியாகி பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், தற்போது விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

vijay

அதில் பூந்தமல்லியில் உள்ள ஓரு திரையரங்கில் சிறப்புக்காட்சி வரும் 18ம் தேதி இரவு மற்றும் மாலை நேரக்காட்சிக்கு 1500 மற்றும் 1200 ரூபாய் கட்டணம் நிர்ணையிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வெளியாகும் 19ம் தேதிக்கு 500ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது.