வசூலில் தெறிக்கவிடும் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2! மூன்று நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Thilluku thuttu movie three days collection details


Thilluku thuttu movie three days collection details

நடிகர் சந்தானம் நடிப்பால் மாபெரும் வெற்றிபெற்ற படங்கள் எத்தனையோ உள்ளன. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே போன்ற படங்கள் சந்தானத்தின் காமெடிக்காகவே ஓடினது. தற்போது அடுத்த நடிகர்களின் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஹீரோவாக களமிறங்கிவிட்டார் சந்தானம்.

இந்நிலையில்  சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தில்லுக்கு துட்டு-2. தில்லுக்கு துட்டு முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கு மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில்  இப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Santhanam

திரையிட்ட அனைத்து இடங்களிலும் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் சென்னையில் மட்டும் இப்படம் 3 நாட்களில் ரூ 1.38 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

எப்படியும் தமிழகம் முழுவதும் தில்லுக்கு துட்டு-2 ரூ 8 கோடிகள் வரை வசூல் வந்திருக்கும் என தெரிகின்றது, இன்று விடுமுறை என்பதால் இப்படம் ரூ 10 கோடி வசூலை தமிழகத்தில் மட்டும் தரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.