BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அட.. தெறி பேபி நைனிகாவா இது! கிடுகிடுவென வளர்ந்து இப்படி ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே!
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம்வந்தவர் மீனா. திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிஸியான அவர் மீண்டும் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடித்துவருகிறார்.
இதனிடையே மீனாவின் மகள் நைனிகா விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற தெறி படத்தில் நடித்திருந்தார். தெறி படத்தில் நைனிகாவின் அழகான, திறமையான நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டது. நைனிகா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

தெறி படத்தில் குழந்தையாக நடித்த அவர் தற்போது நன்கு வளர்ந்து விட்டார். அவர் தனது அம்மாவுடன் சமீபத்தில் நடிகை சினேகாவின் மகளது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் தெறி பேபியா இது? இப்படி வளர்ந்துவிட்டாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.