ஒரே பைக்கில் தல தளபதி! கேலி செய்தவருக்கு KPY தீனா கொடுத்த நெத்தியடி பதிலை பார்த்தீர்களா!!

ஒரே பைக்கில் தல தளபதி! கேலி செய்தவருக்கு KPY தீனா கொடுத்த நெத்தியடி பதிலை பார்த்தீர்களா!!


theena answered to who teased his post in instagram

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம்  மாஸ்டர். இதில் வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீமன், கௌரி கிஷன் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 14 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த  படத்தில் KPY புகழ் தீனாவும் நடித்துள்ளார். அவர்  விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போன் கால் பிராங்க் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். மேலும் தீனா லோகேஷ் கனகராஜ் நடித்த கைதி படத்திலும் நடித்துள்ளார்.

இந்தநிலையில் தீனா, அஜித் பைக் ஓட்டுவது போன்றும், அவர் பின்னால் விஜய் அமர்ந்திருப்பது போன்றும்  எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அதனை கண்ட நெட்டிசன் ஒருவர் தல ரசிகர்களை கவர நினைக்கிறீர்கள் என கேலியாக கமெண்ட் செய்ய அதற்கு தீனா,  எனக்கு அது அவசியமில்லை தளபதி படத்திலிருந்து தலைக்கு எதிரியா? நடுநிலையான ரசிகர்தான் ரெண்டு பேரையும் பிரிக்கிறீங்க என பதிலடி கொடுத்துள்ளார்.