அடக்கடவுளே.. நிலத்தகராறில் நடிகையின் மண்டையை உடைத்த பெண்; போலீஸ் தீவிர விசாரணை.!!

கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் அனுகவுடா (வயது 42). இவர் ஸ்கூல் மாஸ்டர், சுக்ரீவா உட்பட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார். அதேபோல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது பெங்களூரில் வசித்து வரும் இவருக்கு கர்நாடக மாவட்டத்தில் உள்ள கஸ்பாடியில் சொந்தமான நிலம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் கஸ்பாடி கிராமத்தில் இருக்கும் அவருக்கு சொந்தமான இரண்டு 2 நிலத்தை பெற்றோர் கவனித்து வருகிறார்கள்.
அனுகவுடாவின் பெற்றோருக்கும் அந்த கிராமத்தில் வசித்து வரும் நீலம்மா, மோகன் இடையே நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது. அப்போது அனுகவுடா ஊருக்கு சென்று இருந்த நிலையில், இருவரையும் சந்தித்து எதற்காக இவ்வாறு பிரச்சனை செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறவே நீலம்மா மற்றும் மோகன் சேர்ந்து அனுகவுடாவை தாக்கி இருக்கின்றனர். இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நடிகை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.