ஹாலிவுட் நடிகர் ராக்கை ராக்காயியாக்கிய மகள்கள்.. கவனத்தை பெற்ற குட்டிஸின் லூட்டி வீடியோ.!



  The Rock Dwayne Johnson Fun Moment with Daughter 

ஹாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய நடிகராகவும், உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு, சர்வதேச அளவில் அறியப்பட்ட நபராகவும் இருப்பவர் டுவெயின் ஜான்சன். இவரை ராக் என்றால் பலருக்கும் நன்கு தெரியும்.

குத்துசண்டை போட்டிகளுக்கு பின்னர் ஜுமான்ஜி, பாஸ்ட் & பியூரியஸ், கிங் காங், சான் ஆண்ட்ரியாஸ் பால்ட் உட்பட பல படங்களில் நடித்துள்ளவர், மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை மொழிகள், நாடுகள் கடந்து கொண்டவர் ஆவார். 

இதையும் படிங்க: "நீதான் என் உயிருன்னு சொன்னா நம்பாதீங்க., எல்லாம் பொய்" - நடிகை அனுபமா காதல் அட்வைஸ்.!! 

இவருக்கு 2 திருமணம் முடிந்து 3 குழந்தைகள் இருக்கின்றனர். 1997 ல் திருமணம் செய்த முதல் மனைவியை 2008ல் விவாகரத்து செய்தவர், 2019ல் லாரன் ஹசன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். 

குத்துசண்டை போட்டியிலும், திரைப்படத்திலும் தனது வலுவான உடற்கட்டமைப்பு காரணமாக மாஸ் ஹீரோவாக காண்பித்துக்கொண்டவர், நிஜ உலகில் மகள்களிடம், அவர்களின் லூட்டிக்கு இடம் அளித்து வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. 

இதில் ஜான்சனின் மகள் தனது தந்தையின் முகத்தில் லிப்ஸ்டிக் கொண்டு அலங்காரம் செய்து, கழுத்தில் நெக்லஸ் போல படம் வரைந்து இருக்கிறார். இதுகுறித்த விடியோவை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: ஒளியும் வழியும் பிறக்கட்டும் - நடிகை இந்துஜாவின் பொங்கல் 2025 வாழ்த்து.!