இந்தியாவிலேயே முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படம்!

இந்தியாவிலேயே முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படம்!


the-film-is-the-first-of-its-kind-in-india-to-be-made-i-62REQT

ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே இடம்பெற்று வந்த மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பத்தை இந்தியாவில் முதன்முறையாக மலையாள நடிகர் பிருதிவிராஜ் நடைமுறைக்கு கொண்டு வருகிறார். 

இதில் கிரீன் மேட் எனப்படும் திரைகளுக்கு முன்னால் காட்சிகளை எடுத்து அதனை  கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் வேண்டிய லொகேஷனுடன் இணைத்து விடுவர். இந்த முறையில் உருவாகவிருக்கும் இப்படத்தை மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிருத்விராஜ் தயாரிக்கவுள்ளார்.  கோகுல்ராஜ் பாஸ்கர் இப்படத்தை இயக்குகிறார்.


இத்தகவலை பிருத்விராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், சினிமாவில் இது ஓர் ஆச்சரியமான அத்தியாயம். ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார். மேலும் படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இந்தப் படம், மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாகவுள்ளது.