நிஜ வாழ்க்கையிலும் இணையப் போகும் சின்னத்திரை ஜோடி - இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு அறிவிப்பு !

நிஜ வாழ்க்கையிலும் இணையப் போகும் சின்னத்திரை ஜோடி - இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு அறிவிப்பு !


thavamaai-thavamirunthu-serial-fame-will-going-to-ring

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா  என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரிட்டோ. இவர் வேளாங்கண்ணியை சார்ந்தவர். சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவோடு வந்து  சின்னத்திரை  சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். வளர்ந்து வரும் இளம் நடிகரான இவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

Brito

திரைப்படங்கள் சீரியல்கள் மற்றும்  ஆல்பங்களில் நடித்து வரும்  சின்னத்திரை நடிகை சந்தியா ராமச்சந்திரன். இவர் ஜீ தமிழில் வெளியான தவமாய் தவமிருந்து என்ற சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். யோகி பாபு நடிப்பில் வெளியான சலூன் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இவரும் பிரிட்டோவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு பேருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Brito

ஜீ தமிழில் ஒளிபரப்பான தவமாய் தவமிருந்து சீரியலில் இணைந்து நடித்தனர். அந்த தொலைக்காட்சி தொடரில் பிரிட்டோ, பாண்டி என்ற கதாபாத்திரத்திலும் சந்தியா, மலர் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அந்த சீரியலில் இவர்களது கெமிஸ்ட்ரி  அருமையாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்தத் தொடரின் மூலம்  காதலில் விழுந்த இருவரும்  பெற்றோரின் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர்.

இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி 25ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. அந்தப் புகைப்படங்களை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்து  இருவரும் தங்களது மகிழ்ச்சியை ரசிகர்களிடம் தெரிவித்ததோடு தங்களது திருமணம் பற்றி அறிவிப்பையும்  ரசிகர்களுக்கும் சின்ன திரையினருக்கும் அறிவித்திருக்கின்றனர். தற்போது பிரிட்டோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  ராஜா ராணி 2  சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.