அடேங்கப்பா செம கெத்து! மாஸ் ஹீரோக்களையே மிஞ்சிட்டாரே! இணையத்தையே தெறிக்கவிட்ட தர்ஷன்! புகைப்படம் இதோ!

அடேங்கப்பா செம கெத்து! மாஸ் ஹீரோக்களையே மிஞ்சிட்டாரே! இணையத்தையே தெறிக்கவிட்ட தர்ஷன்! புகைப்படம் இதோ!


Tharshan latest photo viral

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த விளம்பர  மாடலாவார் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ்மக்கள் மத்தியில் பெருமளவில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் பிக்பாஸ் இறுதிவரை சென்று இவர்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் எதிர்பாராத விதமாக குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்தது. மேலும் கமலும் அவரது ராஜ்கமல் ப்ரொடக்ஷ்ன் மூலம் அவருக்கு படவாய்ப்பு அளிப்பதாக வாக்களித்துள்ளார். 

Tharshan

அதனை தொடர்ந்து அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிஸியாக உள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் தர்ஷன் அவ்வப்போது தனது  புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தர்ஷன் கோட் சூட்டில் செம கெத்தாக நடந்து வரும்  புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி லைக்குகளை அள்ளி வருகிறது.