குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ஜீ தமிழில் இந்த பிரபல சீரியலில் நடித்துள்ளாரா! ஆள் அடையாளமே தெரியலையே!!

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ஜீ தமிழில் இந்த பிரபல சீரியலில் நடித்துள்ளாரா! ஆள் அடையாளமே தெரியலையே!!


tharsha-gupta-acted-in-mullum-malarum-serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்று பெருமளவில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் கலகலப்பாக இருக்க கூடியவர். மேலும் தர்ஷா குப்தா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே தொடரில் பயங்கர வில்லியாக நடித்து வருகிறார். 

ஆனால் அதற்கு முன்பே அவர் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா தொடரில் வர்ஷா என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான முள்ளும் மலரும் என்ற தொடரிலும் விஜி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் தர்ஷா குப்தா ஆள் அடையாளமே தெரியாமல் உள்ளார்.

tharsha gupta

தற்போது தர்ஷா குப்தா வெள்ளித்திரையிலும் காலடி பதித்துள்ளார் அதாவது திரௌபதி பட இயக்குனர் மோகனின் அடுத்த படமான ருத்ர தாண்டவத்தில் நடிகர்  ரிச்சர்ட் ரிஷியுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் மிகுந்த இரக்ககுணம் மிகுந்த அவர் தற்போது கொரோனா இரண்டாவது அலையால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு தேடி சென்று நாள்தோறும் உணவளித்து வருகிறார். அதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.