மை டியர் ஜானி மாஸ்டரின் மேஜிக்.. சும்மா குத்தாட்டம் போட வைக்குதுல்ல.! நடிகர் தனுஷ் பகிர்ந்த வீடியோவை பார்த்தீங்களா!!thanush-shares-mekam-karukkuthamma-fans-dance-video-vir

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து டாப் நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது சினிமாதுறையே கலக்கி வருகிறார். அவரது கைவசம் தற்போது எக்கச்சக்கமான படங்கள் உள்ளன. நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் மித்ரன் ஜவஹரின் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

இந்த படத்தை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இதில் பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் நடன இயக்குனராக ஜானி பணியாற்றியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற தாய் கிழவி மற்றும் தனுஷ் எழுதி பாடிய மேகம் கருக்காதா பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

இந்நிலையில் இந்த பாடலுக்கு நடிகர் தனுஷ் ஆடிய நடனத்தை,  ரசிகர்கள் ஆடி அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடியோக்களை ஒரே வீடியோவாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதனை ரீ ட்வீட் செய்த நடிகர் தனுஷ் என் அன்பான ஜானியின் மேஜிக் என்று பதிவிட்டுள்ளார்.  அது வைரலாகி வருகிறது.