சினிமா

ஹீரோவாக அறிமுகமாகும் தங்கர்பச்சனின் மகன்.! முதல் படத்திலேயே இப்படியொரு கதாபாத்திரமா!!

Summary:

Thangarvbachan son act in new movie

தமிழ் சினிமாவில் அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை, தென்றல், அம்மாவின் கைப்பேசி, ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுது உள்ளிட்ட பல தரமான படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான். இவர் சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட. அப்படங்களில் அவர் கதாநாயகனாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

 இவர் கிராமத்து பின்னணிகளையும் குடும்பத்தின் யதார்த்தங்களையும் மிகவும் அழகாக  தனது படங்களில் ஒளிர வைக்க கூடியவர். இந்நிலையில் தங்கர்பச்சன் தற்போது சென்னை நகரத்தை மையமாக கொண்டு டக்கு முக்கு டிக்கு தாளம் என்ற படத்தை இயக்குகிறார். 

இந்த படத்தின் மூலம்  தங்கர்பச்சன் தனது மகன் விஜித்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். மேலும் முதல் படத்திலேயே விஜித் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்கஉள்ளார்.மேலும் இப்படத்தில்  முனீஸ்காந்த் கதாநாயகனுக்கு இணையான மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

மேலும் மிலனா நாகராஜ், அஸ்வினி ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக அறிமுகமாகியுள்ளனர். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, ஆகியோர் வில்லன்களாகவும்  நடித்துள்ளனர்.


Advertisement