சினிமா

அது உண்மைதான்..! எனக்கும் அநியாயம் நடந்துள்ளது..! நடிகை தம்மன்னா அதிர்ச்சி தகவல்.!

Summary:

Thammanah talks about her bad experience in cinema

பாலிவுட் படங்களில் இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தும், ஒருசில கும்பலால் அந்த வாய்ப்பு தனக்கு தடுக்கப்பட்டதாக ஏஆர் ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் பேட்டியளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளம் நடிகர் சுஷாந்த் சிங்க் மரணத்திற்கு பிறகு பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் மட்டுமே வாய்ப்பு பெற்றுவருவதாகவும், மற்றவர்களின் வாய்ப்பு அவர்களால் தடுக்கப்படுவதாகவும், மற்றவர்கள் ஒதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் கொடுத்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை தம்மனாவும் அதே குற்றச்சாட்டை முன்வைத்து தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், விருதுகள் கொடுக்க பலமுறை தன்னுடைய பெயர் பரிசீலிக்கப்பட்டது என்றும், விருது பட்டியலில் எனது பெயர் இருந்தாலும் ஒருமுறைகூட எனக்கு விருது கிடைக்கவில்லை எனவும், வாரிசு நடிகர், நடிகைகளுக்கே பெரும்பாலும் விருது கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

என்னதான் ரசிகர்களின் ஆதரவு இருந்தாலும், திறமையான நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் தந்தால்தான் அவர்களை ஊக்குவிக்க முடியும் என்று தம்மன்னா கூறியுள்ளார்.


Advertisement