அவரை பார்த்தால் பொறாமையாக இருக்கும்! தமன்னா யாரை கூறுகிறார் தெரியுமா?

அவரை பார்த்தால் பொறாமையாக இருக்கும்! தமன்னா யாரை கூறுகிறார் தெரியுமா?


thamanna-talks-about-udhayanithi-stalin

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள படம் கண்ணே கலைமானே. படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. படம் வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்கள் சந்தில் கலந்துகொண்டார் படத்தின் நாயகி தமன்னா. படத்தில் நடித்தது பற்றி தனது அனுப்புவங்களை பகிர்ந்துகொண்டார் தமன்னா.

Thamanna

படம் பற்றி கூறிய அவர், இந்த படத்தில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன், வங்கி அதிகாரியாக இந்த படத்தில் நடித்துளேன். படத்தின் கதையை கேட்ட உடனே படத்தின் நாயகன் உதயநிதியிடம் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா? என்று ஆச்சர்யமாக கேட்டேன். காரணம், படத்தில் அவருக்கு இணையாக எனக்கும், வடிவுக்கரசி அம்மாவுக்கும் முக்கியத்துவம் இருக்கும்.

Thamanna

இது முழுக்க முழுக்க காதல் கதை என்று தெரிவித்துள்ளார் தமன்னா. மேலும் படத்தின் ஒருசில காட்சிகளை பார்த்து நான் அழுதுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார் தமன்னா. மேலும் படத்தின் நாயகன் உதயநிதி பற்றி கூறிய தமன்னா, அவரை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும், எது நடந்தாலும் பார்ப்பதற்கு அப்பாவியாகவே தெரிவார் என்று தெரிவித்துள்ளார் தமன்னா.