த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
யாரும் அறியாத ரகசியம்.. தளபதி விஜய் சிறுவயதிலிருந்து பாதுகாத்து வைத்திருக்கும் அந்த ஒரு விஷயம்..! என்னவென்று தெரியுமா?..!!
தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் இவரது நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் விஜய் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் தொலைக்காட்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டு பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விஜய் தனக்கு பிடித்த போட்டோ குறித்து பேசியிருக்கிறார்.
சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் அப்பா வீட்டில் ரஜினி நடித்த 'பணக்காரன்' திரைப்படத்தின் சூட்டிங் நடந்தபோது, ரஜினிக்கு வீட்டை சுற்றிகாட்டி விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டாராம். அதற்குமுன் நான் சிகப்பு மனிதன் சூட்டிங்கிலும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சேர்த்து பத்திரமாக வைத்துள்ளதாக அவர் கூறியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
Thalapathy @actorvijay about his favourite photo with @rajinikanth sir 😍! #Varisu pic.twitter.com/5RGRo9boXu
— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) October 5, 2022