அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தளபதி 68 படத்தின் முதல் பாடல் வெறித்தனமாக இருக்கும்.. யுவன் சங்கர் ராஜா கொடுத்த அப்டேட்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
தற்போது இந்த படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

இதில், நடிகர் விஜய்யின் புதிய கீதை படத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா மீண்டும் இசையமைக்க உள்ளார். இந்த நிலையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோசன் ராஜா தளபதி 68 படத்தில் முதல் பாடல் தர லோக்கல் குத்து பாடல் ஆக இருக்கும் என தெரிவித்துள்ளார். தற்போது எந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.