#Breaking: தலைவர் 170 படத்தில் ரஜினியின் தோற்றம் குறித்த புகைப்படம் வெளியீடு: படப்பிடிப்பு தொடக்கம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

#Breaking: தலைவர் 170 படத்தில் ரஜினியின் தோற்றம் குறித்த புகைப்படம் வெளியீடு: படப்பிடிப்பு தொடக்கம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



Thalaivar 170 Update 4 Oct 2023 Shooting Begins 

 

டிஜெ ஞானவேல் இயக்கத்தில், லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தலைவர் 170. இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும். 

படத்தின் படப்பிப்பு தொடங்கியிருக்கும் நிலையில், நல்ல கருத்துள்ள - பொழுதுபோக்கு அம்சமான படமாக தலைவர் 170 இருக்கும் என ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். 

இப்படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலரும் நடிக்கவுள்ளனர். இந்த தகவல் படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, ரஜினியின் புதிய தோற்றம் தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.