தமிழகம் சினிமா

தல அஜித் இல்லாமலேயே கால்வாசி முடிந்துள்ள பணி; தீவிர படப்பிடிப்பில் பிங்க் குழுவினர்.!

Summary:

thala ajith new flim pink quick shooting

தல அஜித் இல்லாமலேயே அவர் நடிக்கும் புதிய படமான பிங்க் படத்தின் கால்வாசி பணிகள் நிறைவடைந்துள்ளதாக அப்படத்தின் இயக்குனர்  எச்.வினோத் தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் தல அஜித். விஸ்வாசம் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றிபெற்றதால் படகுழுவும், அஜித் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். பிங்க் படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கிற்காக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் தல அஜித்.

இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான PINK படத்தின் ரீமேக் படமாகும். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை டாப்ஸி நடித்த கேரக்டரில் நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்து வருகிறார். 

இந்நிலையில் அஜித் இல்லாமலேயே இந்தப் படத்தின் 30சதவீதம் படப்பிடிப்பு தற்போதே முடிந்துவிட்டதாம், ஹீரோயின்களை வைத்தே இந்த காட்சிகளை எடுத்துவிட்டார்களாம் படக்குழுவினர். அடுத்த வாரம் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ளவிருக்கின்றார். எப்படியும் படம் மார்ச் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.


Advertisement