ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
கஜா புயல் நிவாரண நிதியாக, தல அஜித் 15 லட்சம் கொடுத்தது எல்லாம் பொய்! அவர் கொடுத்தது எவ்வளவு தெரியுமா?
கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
நிதி வழங்கியவர்கள் பட்டியலை அரசு வெளியிட்டபோது அதில் நடிகர் அஜித்குமார் 15 லட்சம் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கொடுத்த நிதியை கூட ஊடகங்களுக்கு தெரிவிக்காமல் கொடுத்த அஜித்தை பலரும் பாராட்டினார்கள்,
இந்நிலையில், சேலத்தை சேர்ந்த சினிமா விநியோகஸ்தர் 7ஜி சிவா அவர்கள் அஜித்குமார், கஜா புயலுக்கு நிவாரண நிதியாக 15 லட்சம் மட்டும் கொடுக்கவில்லை 5 கோடி கொடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
அஜித்தின் விஸ்வாசம் படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதனால் எந்த விதமான கொண்டாட்டங்களுடன் விஸ்வாசத்தை வெளியிடலாம் என்று அஜித் ரசிகர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.
கஜா புயலுக்கு 15 லட்சம் இல்ல அவர் 5 கோடி வரை கொடுத்திருக்கார்..🎉😎🙏
— AJITH FANS UPDATES (@AjithFansUpdate) 2 December 2018
150D TO EMPEROR AJITH BDAY pic.twitter.com/P63PzgdNyB
அதில் கலந்துகொண்டு பேசிய சேலத்தை சேர்ந்த சினிமா விநியோகஸ்தரான சிவா, கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அஜித் 15 லட்சம் கொடுத்தார் என்று சொல்வார்கள். ஆனால், அவர் 5 கோடி வரை கொடுத்திருக்கிறார். தான் செய்த உதவிகளை வெளியே சொல்லாமல் இருப்பதுதான் அவருடைய குணாதிசயம்.
அவருடன் நன் பர்சனலாக பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன் என்பதால் எனக்குத் தெரியும் என கூறியுள்ளார்.