சினிமா

வாவ்.. செம கெத்துதான்! பைக் ரைடிங் சென்ற தல அஜித்! இணையத்தை தெறிக்கவிடும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக  இருப்ப

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவருக்கென இந்தியளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்கள் தல அஜித் படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாளை கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர். தல அஜித் தற்போது போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

 இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தல அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங் என பல்வேறு திறமைகளை கொண்டு விளங்குகிறார்.

மேலும் அவ்வப்போது தல அஜித் சைக்கிளிங், துப்பாக்கி சுடுதல், பைக் ரைடிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகும். இந்த நிலையில் அஜித் சமீபத்தில் பைக் ரைடிங் செய்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் அதனை தல ரசிகர்கள் பெருமளவில் வைரலாக்கி வருகின்றனர்.

 

 


Advertisement