செம கெத்து!! தல 60வது படத்திற்கு இப்படியொரு தலைப்பா? மாஸ் காட்டும் தல ரசிகர்கள்!!

செம கெத்து!! தல 60வது படத்திற்கு இப்படியொரு தலைப்பா? மாஸ் காட்டும் தல ரசிகர்கள்!!


Thala 60 movie title announced

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் திரைப்படங்களில் நடித்து 
தற்போது உச்ச முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி  உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கென பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் சிறு கதாபாத்திரத்தில்  நடிக்கவும் நடிகைகள் தவமாய் காத்திருக்கின்றனர் 

இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தின் மூலம் அவருக்கு ஏராளமான பெண்ரசிகர்களும் உருவாகினர். மேலும் இந்த படம் வசூல் ரீதியாகவும் பெரும்  சாதனைபடைத்தது. 

Thala 60

இதனை தொடர்ந்து தல அஜித் தற்போது தனது 60வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் பட பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து  தல60 படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை தல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாக்கி 
வருகின்றனர்.