என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
அர்னால்ட்டின் "Terminator" படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் நுரையீரல் புற்றுநோயால் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்.!

ஹாலிவுட்டில் அர்னால்ட் நடிப்பில், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் டெர்மினேட்டர். இந்த படத்தில் Dr. Peter Siberman கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஏரல் போயேன் (Earl Boen).
இவர் டெர்மினேட்டர் படத்தில் நடித்த டாக்டர் கதாபாத்திரம் பலராலும் கவனிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதால், பின்னாளில் அப்படியே அழைக்கப்பட்டார். இவர் தி மென் வித் டூ பிரான்ஸ், ஏலியன் நேஷன் உட்பட பல படத்திலும் தொலைக்காட்சி தொடரிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போயேன், கடந்த 5ம் தேதி ஹவாய் தீவுகளில் வைத்து பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 82 ஆகிறது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.