சினிமா

தற்கொலை முயற்சி.! சுயநினைவின்றி கிடந்த பிரபல சின்னத்திரை நடிகை! என்ன காரணம்??

Summary:

தற்கொலை முயற்சி.! சுயநினைவின்றி கிடந்த பிரபல சின்னத்திரை நடிகை! என்ன காரணம்??

தெலுங்கில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை கட்டா மைதிலி. இவர் ஹைதராபாத்தில் பஞ்சகுட்டாவில்  வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்பு பஞ்சகுட்டா காவல்துறைக்கு போன் செய்து தனது கணவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவ்வாறு செய்யவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து போலீசார் மைதிலியின் செல்போன் சிக்னலை வைத்து அவரது வீடு இருக்கும் பகுதியை கண்டறிந்து அங்கு விரைந்துள்ளனர். வீட்டில் மைதிலி சுயநினைவற்ற நிலையில்  கிடந்துள்ளார்.

பின்னர் அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மைதிலியை அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அவர் பிரீசர் எனப்படும் ரம் வகையை சேர்ந்த 8 மதுபான பாட்டில்கள், தூக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் எடுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு நடிகை மைதிலி கடந்த ஆண்டு தனது கணவர் ஸ்ரீதர் ரெட்டி அவரது குடும்பத்தினருக்கு எதிராக துன்புறுத்தல் புகார் அளித்துள்ளாராம். மேலும் அதற்கான முதற்கட்ட விசாரணை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.


Advertisement