சினிமா

விஜய் சேதுபதியுடன் கெத்தாக பைக்கில் வந்த தமன்னா! எல்லாம் எதுக்காகனு பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபத

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவரது கைவசம் ஏராளமான திரைப்படங்கள் உள்ளது. மேலும் ஹீரோவாக மட்டுமின்றி விஜய்சேதுபதி வில்லனாகவும் அவதாரமெடுத்து ரஜினியின் பேட்ட, நடிகர் விஜய்யின் மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஜய்சேதுபதி தமிழ் மட்டுமின்றி சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையே விஜய்சேதுபதி சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இதன் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் எதிர்பார்ப்பையும் கிளப்பியது.

இதே போல் தெலுங்கில் ஜெமினி டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தமன்னா தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில் தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய்சேதுபதியுடன் தமன்னா பைக்கில் கெத்தாக வருகிறார். பின்னர் அரங்கின் உள்ளே செல்லும் தமன்னாவுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து கூறுகிறார். இந்த ப்ரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement