சாய்பல்லவியைதான் திருமணம் செய்வேன்.! வெளிப்படையாக போட்டுடைத்த பிரபல இளம்நடிகர்! யார் தெரியுமா?

telungu actor varun dej like to mary saipallavi


telungu-actor-varun-dej-like-to-mary-saipallavi

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் வருண் தேஜ். அவர் சமீபத்தில் தமிழில் வெளியாகி வெற்றி பெட்ரா ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்கான கட்டலகொண்டா கணேஷ் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கடந்த வாரம் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடையே  மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் வருண் சமீபத்தில் லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கும் ஃபீட் அப் வித் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் மிகவும் கலகலப்பாக பேசிவந்த லட்சுமி மஞ்சு அவருடன் இணைந்து நடித்த நடிகைகளான  சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, ராஷி கன்னா ஆகியோரின் பெயரைக் கூறி , இவர்களில் யாரை நீங்கள் திருமணம் செய்துகொள்ளவும், யாருடன் டேட்டிங் செல்லவும், யாரை கொலை செய்யவும் விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளார். 

saipallavi

அதற்கு வருண் சிரித்துக்கொண்டே கிண்டலாக  சாய் பல்லவியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும்  பூஜா ஹெக்டேவுடன் டேட்டிங் செல்லவும், ராஷி கண்ணாவை கொலை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கொண்டு ரசிகர்கள் சாய்பல்லவியை வருண் தேஜ் திருமணம் செய்யவுள்ளதாக கூறிவருகின்றனர்.

saipallavi

சாய்பல்லவி, வருண் தேஜ் இருவரும் ஒன்றாக இணைந்து பிடா என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளனர். அப்படம் ரசிகர்களையே மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.