கொரோனா அச்சுறுத்தலால் ஷூட்டிங் ரத்து! அம்மாவுடன் ஊறுகாய் போடும் பிரபல நடிகர்! வைரலாகும் வீடியோ! - TamilSpark
TamilSpark Logo
சினிமா வீடியோ

கொரோனா அச்சுறுத்தலால் ஷூட்டிங் ரத்து! அம்மாவுடன் ஊறுகாய் போடும் பிரபல நடிகர்! வைரலாகும் வீடியோ!

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பரவிய வைரசால் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதுமே பெரும் பீதியில் உள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்  இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சவுரியா. இவர் தமிழ் சினிமாவில் விஜய் இயக்கிய தியா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் பல படங்களையும் தயாரித்துள்ளார்.

 கொரோனா எதிரொலியால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நடிகர்-நடிகைகள் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் நேரங்களை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நாக சவுரியா தனது அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் போட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo