பிக்பாஸ் 6-ல் ஆபாசம்.. ஷோ இழுத்துமூடப்படுமா?.. நிறுவனத்திற்கும், தொகுப்பாளருக்கும் நீதிமன்றம் பரபரப்பு நோட்டீஸ்..! பொங்கியெழும் ரசிகர்கள்..!!
இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக இருந்து வருவது பிக்பாஸ். ஹிந்தியில் சல்மான்கான், தெலுங்கில் நாகார்ஜுனா, தமிழில் கமல்ஹாசன் மற்றும் கன்னடத்தில் சுதீப், மலையாளத்தில் மோகன்லால் என பல முன்னணி நட்சத்திரங்களும் இந்த ஷோவை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தமிழில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாவதை போலவே, தெலுங்கிலும் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அத்துடன் தெலுங்கு பிக்பாஸ் ஷோவில் ஆபாசம் இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இது குறித்து விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம் நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அத்துடன் மத்திய அரசு இரண்டு தெலுங்கு மாநிலங்கள் மற்றும் தொகுப்பாளர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதனை தொடர்ந்து அவர்கள் என்ன பதிலளிக்க போகிறார்கள்? இதோடு பிக்பாஸ் தடை செய்யப்படுமா? என்று ரசிகர்கள் பொங்கியெழுந்து பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.