
நடிகை டாப்ஸி தன்னைக் குறித்து மோசமாக விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்சினிமாவில் ஆடுகளம் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதனைத் தொடர்ந்து அவர் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் கேம் ஓவர் என்ற திரில்லர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
நடிகை டாப்ஸி தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தற்போது பாலிவுட்டில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளார். நடிகை டாப்ஸி சமூக வலைத்தளங்களில் தன்னை மோசமாக தகாத வார்த்தைகளில் பேசுபவர்களை கண்டுகொள்ளாமல் விடாமல், அந்த பதிவை பகிர்ந்து அதற்கு சராமரியாக பதிலடி கொடுப்பார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில், ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகுதியற்ற நடிகை என அசிங்கப்படுத்தி அவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். இதன் ஸ்க்ரீன்ஷாட் புகைப்படத்தை பகிர்ந்த டாப்ஸி நான் எதை உயர்த்த வேண்டும்? நான் உயர்த்த வேண்டிய ஒரே விஷயம் உங்கள் கண்களுக்கு தெரியாத தரத்தை மட்டுமே என பதிலடி கொடுத்துள்ளார்.
Advertisement
Advertisement