படுக்கைக்கு அழைத்த இயக்குனர், மேனேஜர்., 300 படவாய்ப்புகளை இழந்துவிட்டேன் - மனஉளைச்சலுடன் உண்மையை உடைத்த பிரபல தமிழ் நடிகை..!

படுக்கைக்கு அழைத்த இயக்குனர், மேனேஜர்., 300 படவாய்ப்புகளை இழந்துவிட்டேன் - மனஉளைச்சலுடன் உண்மையை உடைத்த பிரபல தமிழ் நடிகை..!


tamil serial actress jivitha pressmeet

 

தமிழ் சினிமாவில் துணைகதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜீவிதா. இவர் பல நெடுந்தொடர்களிலும் நடித்து வரும் நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் ரிலீசான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்திருப்பார். 

இப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த நிலையில், பேட்டி ஒன்றில் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "படுக்கைக்கு அழைத்து அட்ஜஸ்ட் செய்யாததால் 300 பட வாய்ப்புகளை இழந்தேன். 

tamil actress jivitha

எனக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தாலும், இயக்குனர், மேனேஜர் என பலரை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறினர். இதனால் திறமை இருந்தும் எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் பலமுறை நான் மன உளைச்சலுக்கு ஆளாகி தனிமையில் இருந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.