சினிமா

மாறாத அன்பு! தமிழ் ரசிகை செய்த காரியத்தால், செம ஹேப்பியில் நடிகை லைலா!!வைரலாகும் சூப்பர் புகைப்படம்!!

Summary:

மாறாத அன்பு! தமிழ் ரசிகை செய்த காரியத்தால், செம ஹேப்பியில் நடிகை லைலா!!வைரலாகும் சூப்பர் புகைப்படம்!!

தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கள்ளழகர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை லைலா. அதனை தொடர்ந்து அவர் சூர்யா, பிரபுதேவா,விக்ரம், அஜித் என பல முன்னணி நடிர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

நடிகை லைலா கண்ணகுழியழகி, சிரிப்பழகி என ரசிகர்களால் புகழப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் 2006 ஆம் ஆண்டு ஈரான் தொழிலதிபரான மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இந்நிலையில் 16 ஆண்டு இடைவெளிக்கு நடிகை லைலா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லைலா அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்தநிலையில் அண்மையில் தமிழ் ரசிகை ஒருவர் அவருக்கு மல்லிகை பூவை அன்போடு கொடுத்துள்ளார். அந்த அன்பை கண்டு நெகிழ்ந்து போன லைலா அத்தகைய புகைப்படத்தை செம ஹேப்பியாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

    


Advertisement