பரவிய லிப்லாக் வீடியோ.! அந்த பிரபல நடிகருடன் காதலா?? உண்மையை உடைத்த நடிகை தமன்னா!!

பரவிய லிப்லாக் வீடியோ.! அந்த பிரபல நடிகருடன் காதலா?? உண்மையை உடைத்த நடிகை தமன்னா!!


Tamanna talk about his love rumour

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை தமன்னா. தொடர்ந்து அவர் கல்லூரி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் தமன்னாவிற்கு பட வாய்ப்புகள் வர துவங்கிய நிலையில் அவர் அஜித்,, விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை தமன்னா தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தி நடிகர் விஜய் வர்மாவும் நடிகை தமன்னாவும் காதலிப்பதாக தகவல்கள் பரவியது. மேலும் விஜய் வர்மாவை தமன்னா கட்டிப்பிடித்து லிப்லாக் முத்தமிடும் வீடியோவும் வைரலானது. ஆனால் அது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத தமன்னா அண்மையில் பேட்டி ஒன்றில் காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

tamanna

அவர் கூறியதாவது, நான் விஜய் வர்மாவுடன் ஒரு படம் மட்டுமே நடித்துள்ளேன். அதற்குள் அவருடன் காதல் என கூறிவிட்டனர். அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க அவசியமில்லை என நினைக்கிறேன். சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களை விட நடிகைகளே அதிக திருமண வதந்தி செய்திகளில் சிக்குகின்றனர்.

டாக்டர், தொழிலதிபர் என பலருடனும் எனக்கு திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர்.  நான் பலமுறை திருமணம் செய்து கொண்டதாக உணர்கிறேன். உண்மையாகவே எனக்கு திருமணம் நடந்தால் அதை ரசிகர்கள் நம்புவார்களா இல்லை அதையும் வதந்தியென கூறிவிடுவார்களோ என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.