மாலத்தீவில் காதலருடன் ஆட்டம் போடும் தமன்னா.! வைரலாகும் புகைப்படங்கள்.!
'கேடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தமன்னா. இந்தப் படம் 2007ம் ஆண்டு வெளியானது. இதைத் தொடர்ந்து தமன்னா தமிழில் கார்த்தி, விஜய், விஷால், ஜெயம் ரவி, சூர்யா என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் தமன்னா. இந்தப் படத்தில் இவர் ஆடிய "காவாலா" பாடல் யூ ட்யூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அடுத்ததாக, சுந்தர் சி யின் அரண்மணை 4 படத்தில் நடித்திருக்கிறார் தமன்னா. இந்தப் படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் மராத்தி என பல மொழிகளிலும் நடித்து வரும் தமன்னா, அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

தற்போது தமன்னா அவரது காதலர் விஜய் வர்மாவுடன் மாலத்தீவுக்கு சுற்றலா சென்றுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பீச் மணலில் கோலம் போடுவது, கடலில் ஆட்டம் போடுவது, சாப்பிடுவது போன்ற புகைப்படங்களை தமன்னா பதிவேற்றியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் நிறைய லைக்ஸ்களை அள்ளி வருகின்றன.