சினிமா

மாஸ்டர் செஃப் தயாரிப்பாளர் மீது வழக்கு! நடிகை தமன்னா அதிரடி முடிவு! ஏன் தெரியுமா??

Summary:

மாஸ்டர் செஃப் தயாரிப்பாளர் மீது வழக்கு! நடிகை தமன்னா அதிரடி முடிவு! ஏன் தெரியுமா??

சன் தொலைக்காட்சியில் சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி மாஸ்டர் செஃப். தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அதை போலவே மாஸ்டர் செஃப் தெலுங்கிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அதனை முன்னணி நடிகையான தமன்னா தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் சமீபத்தில்  தமன்னா அந்த நிகழ்ச்சியில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு பதில் மற்றொரு பிரபல தொகுப்பாளினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது தமன்னா தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமன்னாவின் வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், சம்பள பாக்கி இருப்பதாலும், தயாரிப்பு தரப்பின் ஒழுக்கமற்ற செயலாலும் தமன்னா மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் தயாரிப்பு குழு மீது வழக்கு தொடரும் முடிவில் உள்ளார். இந்த நிகழ்ச்சியை முடித்து கொடுப்பதற்காக அவர் ஏற்கனவே முடிவான சில ஒப்பந்தங்களையெல்லாம் ரத்து செய்தார். ஆனால் திடீரென்று அவர் நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதனால் தமன்னா வழக்கு தொடரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.

 


Advertisement